அன்று பூமி தட்டையானது தான் என்று இந்த உலகம் நம்பபட்டு வந்த சமயம், பூமி தட்டையானது என்றும் உருண்டை வடிவம் என்றும் பல தரப்பினரிடம் பல தரப்பான கருத்துக்கள் நிலவி வந்த காலம் அது. கிமு 340ல் அரிஸ்டாட்டில் என்பவர் நாம் வசிக்கும் இந்த பூமி தட்டையாக இருப்பதை விட கோள வடிவத்தில் இருக்களாம் என்றும் அதற்கான விளக்கத்தையும் தன் புகழ் பொற்ற ON THE HEAVENS என்னும் புத்தகதில் முன் மொழிந்து இருந்தார், அந்த விளக்கத்தை சற்று தெளிவாக காணலாம்.
சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே வரும் போது ஏற்படுகிறது என்று உணர்ந்த அவர் கிரகணம் எற்படும் பொழுது பூமியின் நிழல் சந்திரனில் வட்ட வடிவில் விழுவதற்கு காரணம் பூமி உருண்டை வடிவத்தை கொண்டிருப்பதால் தான் என்றும் ஒரு வேளை பூமி தட்டை வடிவில் இருந்தால் அதன் நிழலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை கணித்தார்.
கிரேக்கர்கள் கூட இந்த உலகம் கோள வடிவம் தான் என்றும் அதனால் தான் ஒரு கடலில் பயனிகும் கப்பல் தொலைதுரம் செல்ல செல்ல சுருங்காமல், சிறிது சிறிதாக கீழ் பக்கமாக மறைகிறது என்று அவர்களும் தன் பங்கிற்கு விவாதம் வைத்தனர்.இது ஒரு புறம் இருக்க மிக பெரிய தத்துவ மேதையான அரிஷ்டாடில் இந்த பூமி நிலையானது என்றும் சந்திரனும் சூரியனும் மற்றும் நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன என்றும் நம்பி வந்தார். ஏன் இந்த பிரம்பஞ்சத்தில் நம்முடைய பூமி தான் மையப்பகுதி என்றும் கருதிவந்த காலம் அது.இது போலவே மற்றொரு அறிவியலாளரான Ptolemy’s இதே கருத்தை முன் மொழிந்தார்.இது வரை நம்பபட்டு வந்த இந்த சித்தாந்தம் 1514ம் ஆண்டு ஒருவரால் தகர்த்து எறியப்பட்டது.
அவர் தான் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்.
1514ல் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் தற்போதைய நிலையை பெரும்பாலும் ஒத்திருக்கும் பிரம்பஞ்ச மாதிரியை தேவாலயங்களின் தண்டனைகளுக்கு பயந்து தன் பெயரை குறிப்பிடாமல் தன் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார். அதில் சூரியன் நிலையானது என்றும் பூமி மற்றும் கோள்களும் சூரியனை வட்ட பாதையில் சுற்றி வருகின்றன என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதில் கவலையான விசயம் என்னவென்றாள் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் இறந்து ஒரு நூற்றாண்டு கடந்தும் கூட இந்த கருத்தை அப்போதைய மக்கள் பொரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை.
1609ல் கலிலியோ கலிலி என்பவர் தன் சொந்த முயற்சியில் கோள்களை ஆராயும் நோக்கில் ஒரு தொலைநோக்கி ஒன்றை கண்டுபிடித்தார். அது தான் உலகின் முதல் தொலை நோக்கி. இன்றய நவீன தொலைநோக்கிகள் கூட கலிலியோ கண்டுபிடித்த முதல் தொலைநோக்கியின் பரிமான வளர்ச்சியே ஆகும்
கலிலி தன்னுடைய தொலை நோக்கியின் உதவியுடன் தினமும் jupiter கிரகத்தை கூர்ந்து நோக்கினார், அப்போது jupiter கிரகதிற்கு அருகே சில பAறை போன்ற வடிவம் கொண்ட சில மர்ம பொருட்களும் அருகில் இருப்பதை பார்த்து ஆச்சிரியப்பட்டார். அது jupiter கிரகத்தின் நிலவாக இருக்கலாம் என்று கனித்தார். அந்தசமயத்தில் பூமிதான் மையப்பகுதி என்றும் சூரியனும் கோள்களும் மாறி மாறி பூமியை சுற்றி வருகிறது என நம்பபட்ட காலம் அது. கலிலியும் மற்றவர்களை போல jupiter கிரகமும் மற்றும் அதன் நிலவும் நம் பூமியை சுற்றி வருகின்றது என நம்பியதில் ஆச்சிரியமில்லை. தொடந்து jupiter கிரகத்தை ஆராய்ந்து வந்த கலிலி ஒரு சமயத்தில் பேரதிர்ச்சி அடைந்தார். காரணம் jupiter கிரகத்தின் நிலவு பூமியின் வட்ட பாதைக்கு வருவதற்கு பதிலாக ஒரு சிக்கலான பாதையில் பயனிப்பதை கண்டார்.

இறுதியாக அதன் நிலவு பூமியை சுற்றுவதற்கு மாறாக jupiter கிரகத்தை சுற்றுகின்றது என கண்டறிந்தார்.பின்பு மற்ற கோள்களும் இதே போல தான் பூமியை சுற்றுவதற்கு மாறாக சூரியனை சுற்றி வருகின்றது என கனித்தார். அப்போது தான் உணர்ந்தார் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் சொன்னது சரியேன்று.
அதே சமயத்தில் கெப்லர்(kepler) கோப்பர்நிக்கஸின் ஆய்வில் சில திருத்தங்களை செய்தார். அதாவது கோப்பர்நிக்கஸ் கூறியதை போல கோள்கள் சூரியனை வட்ட பாதையில் சுற்றவில்லை. அது நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிறது என்று கணித்தார். எதிர்பாராத விதமாக கெப்லர் கோள்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றுகிறது என்று கனித்தாலும் பிற்காலதில் ஆய்வின் முடிவில் அது சரி என்று உணர்த்தப்பட்டது. இவற்றையெல்லாம் சரியாக கனித்த கெப்லர் கோள்கள் சூரியனை சுற்ற காரணம் சூரியனின் ஈர்ப்பு விசைதான் என்று அவரால் கணிக்க முடியாமல் போனது தான் ஆச்சரியமான விசயம்.
கோள்கள் சூரியனை சுற்ற சூரியனின் ஈர்ப்பு விசையே காரணம் என உணர்வதற்கு அப்போதைய மக்கள் இன்னும் ஒரு நுற்றாண்டிற்கு மேல் நியூட்டனின் வருகைக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
1687ம் ஆண்டு நியூட்டன் தன் புகழ் பெற்ற Principia Mathematica Naturalis Causae என்னும் நூலை வெளியிட்டார் இது ஒட்டு மொத்த உலகமும் அவரை திரும்பி பார்க்க வைத்தது. இதுவே அறிவியல் உலகில் மாபெரும் ஒரு தனி மனித படைப்பு. இதில் விண்வெளியில் உள்ள பொருட்களை கட்டுரைகளில் மட்டும் விளக்குவது மட்டுமில்லாமல் கனிதவியலுடன் தொடர்புபடுத்தி விளக்கி உள்ளார். மேலும் உலகளாவிய ஈர்ப்புவிதிக்கு ஒரு சட்டத்தை முன்வைத்தார், அதாவது இந்த பிரம்பஞ்சத்தில் உள்ள ஒவ்வொறு பொருட்களும் வேறு பொருட்களை விசையின் மூலம் கவர்கிறது என்பதாகும். ஒரு மரத்தில் இருந்து ஒரு ஆப்பில் விழுந்ததன் காரணமாகவே ஈர்ப்பு விசையை பற்றிய கருத்து ஏற்படக் காரணமாக அமைந்தது என்று நம்பபடுகிறது.

ஈர்ப்பு விசையின் காரனமாகவே நிலவு பூமியையும், பூமி சூரியனையும் நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது என விளக்கியதன் மூலம் அன்று அரிஸ்டாட்டில், Ptolemy’s மற்றும் திரு சபையினரால் நம்பபட்டு வந்த கருத்து சிதறடிக்கப்பட்டது. குறிப்பாக அந்த சமயத்தில் நட்சத்திரங்கள்(சூரியனும் ஒரு நட்சத்திரமே) அனைத்தும் நிலையானவையாக தான் இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வந்தது, ஆனால் இது நியூட்டனுக்கு பெருத்த சந்தேகத்தை எழுப்பியது காரணம் அவரின் ஈர்ப்பு விசை சட்டம் கூறுவது என்னவென்றால் இந்த பிரம்பஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மற்ற பொருட்களுடன் ஈர்ப்பு விசையின் காரணமாக கவரப்படுகிறது என்பதாகும். இதில் நட்சத்திரங்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
சுமார் இருபதாம் நூற்றாண்டு முன்பு வரைக்கும் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதை அன்றைய அறிவியலாளர்களும் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஏன் நியூட்டனின் ஈர்ப்பு விதியில் கூட இந்த பிரம்பஞ்சம் நிலையானவை இல்லை என்பதை எடுத்துறைதாலும் இந்த பிரம்பஞ்சம் விரிவடைகிறது என்பதை கூற முடியவில்லை மாறாக அப்போதைய மக்கள் ஈர்ப்பு விசையில் எதிர் விசை எப்படி செயலாற்றுகிறது என்று ஆராய்ந்து இருந்தனர். இரண்டு நட்சத்திரங்களும் ஈர்ப்பு விசையில் பாதிக்க பட்டாலும் அதன் எதிர் விசையின் காரணமாக சம நிலையில்(equilibrium)விலகி உள்ளது என்று கருதினர். எப்படி இருப்பினும் சம நிலை என்பது நிலையானவை அல்ல என்பது நம் அறிந்ததே, காரணம் இரு நட்சத்திரங்கள் மிக அருகில் இருக்கும் நிலையில் அதன் ஈர்ப்பு விசை ஏதிர் விசையை விட ஆதிக்கம் செலுத்தும் இதனால் அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக இரு நட்சத்திரங்களும் மோதும், இரு நட்சத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட தூரதில் விலகி இருந்தாலும் அங்கு ஈர்ப்பு விசையை விட எதிர் விசை ஆதிக்கம் செலுத்துவதினால் விலகி தொலை தூரம் கடந்துவிடும்.
ஜெர்மானிய தத்துவவாதி Heinrich Olbers என்பவர் எல்லையற்ற நிலையான பிரபஞ்ச கருத்தை முன்மொழிந்தார். எல்லையற்ற நிலையான பிரபஞ்சம் என்னும் கருதில் பல கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது அப்படி இருக்கும் சூழ்நிலையில் நட்சத்திரங்களால் இந்த வானம் நிரப்பட்டுவிடும் இதனால் இரவு வானம் சூரியனை போல வெளிசமாக காணவேண்டும் என்ற பிரச்சனை இருந்தது அதற்கு Heinrich Olbers அளித்த பதில் ..
நட்சத்திரங்களில் இருந்து புறப்படும் ஒளி கதிர்கலை சில பொருட்களினால் உறிஞ்சப்படுகிறது அதன் காரனமாக தான் இரவுகள் வானம் கருமையாக (dark night sky paradox) தெரிகிறது என்றார்.
நட்சத்திரங்களில் இருந்து புறப்படும் ஒளி கதிர்கலை சில பொருட்களினால் உறிஞ்சப்படுகிறது அதன் காரனமாக தான் இரவுகள் வானம் கருமையாக (dark night sky paradox) தெரிகிறது என்றார்.
No comments:
Post a Comment